• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விதை மற்றும் நடுகைப் பொருட்களுக்கான புதிய சட்டமூலம் தொடர்பிலான பிரேரிப்பு
- எமது நாட்டின் விஞ்ஞான ரீதியிலான கமத்தொழில் அபிவிருத்தியின் புதிய போக்கில் விதை மற்றும் நடுகைப் பொருட்களின் துறைகளின் சகல பிரிவுகளையும் உள்ளடக்கும் விதத்தில் புதிய சட்டமூலமொன்றை ஆக்குவது தற்போதைய தேவையென அரசாங்கத்தினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தரத்தில் குறைந்த விதைகளின் பயன்பாடு குறைந்த விளைச்சல் மற்றும் கமக்காரர்களின் பிரச்சினைகள் உட்பட, பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க விதைகள் சட்டத்தின் கீழ் ஏற்கனவே இது தொடர்பில் செயல்வலுவிலுள்ள ஏற்பாடுகளிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கும் கமக்காரர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் போதுமானதாக இல்லை. இதற்கமைவாக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு சட்டவாக்கும் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுக்காக தொடர்புபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.