• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் திணைக்களத்தின் கீழுள்ள தம்புள்ள, பெல்வெஹெர இலங்கை கமத்தொழில் கல்லூரிக்கு புதிய விடுதியொன்றை நிருமாணித்தல்
- இரண்டு (02) வருடகால டிப்ளோமா பாடநெறியை கற்கும் மாணவர்களுக்கு மிகத் திருப்திகரமான வதிவிட வசதிகளையும் கற்றலுக்குரிய சூழலையும் உருவாக்கும் நோக்கில் 221.96 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவின மதிப்பீட்டின் மீது புதிய விடுதிக் கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது இந்தக் கருத்திட்டத்தின் ஆரம்பப் பணிகள் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இதற்குத் தேவையான மீதி நிதியத்தை 2014-2016 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட எல்லைக்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.