• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி முதுன்எலயிலுள்ள 80 பேர்ச்சஸ் காணித் துண்டொன்றை தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு குறித்தொதுக்குதல்
- களனி / பேலியகொட பிரதேசங்களில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு மிகத் திருப்திகரமான சேவையொன்றை வழங்கும் பொருட்டு தேவையான வசதிகளைக் கொண்ட பொறியியல் அலுவலகமொன்றை இந்தப் பிரதேசத்தில் நிருமாணிக்கும் நோக்கில் மேற்போந்த காணித் துண்டை இலங்கை காணி மீட்பு, அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு குறித்தொதுக்குவதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.