• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய பாடசாலைக்கு ஹோமாகம, பிட்டிபனவிலுள்ள காணித் துண்டொன்றை குறித்தொதுக்குதல்
- மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய பாடசாலை நிருமாணிப்பின் பொருட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்தொதுக்கப்பட்டுள்ள பிட்டிபன மாஹேனவத்தையிலுள்ள 9 ஏக்கர் காணித் துண்டு ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதோடு, கல்வி அமைச்சினால் தேசிய பாடசாலைக்கான பணிகள் இதில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பாடசாலை அமைந்துள்ள காணிக்கு பின்புறத்திலுள்ள 5 ஏக்கர் விஸ்தீரணத்தைக் கொண்ட காணித்துண்டு கல்வி அமைச்சினால் இந்த தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தும் நோக்கில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தக் காணியை கல்வி அமைச்சிற்கு குறித்தொதுக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.