• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுவரெலியா நகரத்தை அழகுபடுத்தும் கருத்திட்டம்
- நுவரெலிய மாவட்டத்தில் உல்லாசப் பயணிகளின் மனங்கவர் இடமான கிரேகரி குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள காணித் துண்டுகளை அழகுபடுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி நுவரெலியா நகரத்தில் சில அபிவிருத்தி பணிகள் நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. வெட்டு கைத்தொழில் கருத்திட்டமொன்றுக்காக முன்னர் பயன்படுத்திய காணித்துண்டை பொதுமக்களின் களியாட்ட நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான இடமெனக் கருதி ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உரித்தான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.