• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் CHOGM வர்த்தக மாநாட்டுக்காக வழங்கப்படுவதற்கு இனங்காணப்பட்ட முதலீட்டுக் கருத்திட்டங்கள்
- 2013 நவெம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதிவரை இலங்கையில் நடாத்துவதற்குள்ள பொதுநலவாய நாடுகள் அரசாங்க தலைவர்கள் மாநாட்டிற்கு ஒருங்கிணைவாக பொதுநலவாய வர்த்தக சபை இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையில் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக கூட்டத்தை 2013 நவெம்பர் மாதம் 12, 13, 14 ஆகிய திகதிகளில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ளது. இந்த பொதுநலவாய நாடுகளின் வர்த்தக கூட்டத்தின் முக்கிய நோக்கமாவது இலங்கையில் பல்வேறு துறைகளில் நிலவும் வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் பலம்மிக்க முதலீட்டாளர்களை அறியச் செய்விப்பதன் மூலம் இலங்கைக்கு நேரடியான முதலீடுகளை கவர்ந்திழுப்பதாகும். பொதுநலவாய நாடுகளின் வர்த்தக சபை, இலங்கை முதலீட்டுச் சபை இணைந்து எதிர்காலத்தில் நடாத்துவதற்குள்ள பொதுநலவாய நாடுகளின் வர்த்தக கூட்டத்தின் போது பலமிக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக கண்டறியப்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலான பட்டியலொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்பட்டுள்ள முதலீட்டு கருத்திட்டப் பிரிவுகள் சில இங்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது:

* சுற்றுலா மற்றும் களியாட்ட பணிகள் ;
* உயர் கல்வி மற்றும் பயிற்சி;
* கமத்தொழில் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகள்;
* சுகாதாரம்;
* தகவல் தொழினுட்பம்
* உற்பத்தி, கமத்தொழில் பதனிடல்; அத்துடன்
* விமான சேவைகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள்.

இந்த முதலீடுகள் சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.