• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொதுநலவாய நாடுகள் புலமைப்பரிசில் நிதியத்திற்கான பங்களிப்பு
- இலங்கை நீண்டகாலமாக பொதுநலவாய நாடுகள் புலமைப்பரிசில்கள் மற்றும் அதி புலமைப்பரிசில்கள் திட்டத்தில் பயனாளியாவதோடு, இலங்கையின் பல்கலைக்கழக கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் விசேட பங்களிப்பினை வழங்கியுள்ள இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்போர் பெருமளவானோர் பயனடைந்துள்ளனர். ஐக்கிய இராச்சியத்தின் புலமைப்பரிசில் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு இதற்குத் தேவையான நிதியுதவி வழங்கப்படுவதோடு, இந்த ஆண்டிலிருந்து இலங்கை பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் வழங்கும் நாடொன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டிற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதியங்களைப் பயன்படுத்தி் ஐக்கிய நாடுகள் புலமைப்பரிசில் நிதியத்திற்கு ஒருதடவை மாத்திரம் வழங்கப்படவேண்டிய 50,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை பங்களிப்புத் தொகையாக வழங்குவதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.