• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போஷாக்குக்கான பல்துறை செயற்பாட்டுத் திட்டம்
- இலங்கை துரித அபிவிருத்தியை நோக்கி செல்கின்றதெனவும் நாட்டின் முன்னுள்ள சவால்களுக்கு முகம்கொடுக்கும் பொருட்டு எமது செயலணி உடல் மற்றும் உள ரீதியில் ஆரோக்கியமுள்ள மனிதவளமொன்றாக மாற்றவேண்டியுள்ளதெனவும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நாட்டின் சனத்தொகையின் சகல வயது பிரிவினர்களினதும் ஏனையவர்களினதும் போஷாக்கு நிலை உரிய மட்டத்தில் அதிகரிக்கச் செய்யும் பணி முற்றுமுழுதாக சுகாதார துறைக்கு மாத்திரம் வரையறுக்கப்படாததோடு, கல்வி, கமத்தொழில், கால்நடைவளர்ப்பு போன்ற ஏனைய துறைகளினதும் தரப்பினர்களினதும் தலையீடும் இதற்கு அத்தியாவசியமாகும். ஆதலால் போஷாக்குத்துறை பல்துறை தலையீடு அத்தியாவசியமான துறையொன்றாக கண்டறியப்பட்டுள்ளது. தேசிய போஷாக்குச் சபையின் தலையீட்டின் மீது கல்விமான்கள் குழுவொன்றினால் போஷாக்குத் துறையில் சருவதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட செயல்பாடுகள் இந்த பல்துறை செயற்பாட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்போந்த போஷாக்கு செயற்பாடுகளுக்குரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக தேசிய போஷாக்கு தலைவராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.