• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுகங்கை நீர்தேக்கத்தின் முக்கிய வேலைகளுக்கான நிருமாணிப்பு ஒப்பந்தத்தை வழங்குதல்
- மாத்தளை மாவட்டத்தின் லக்கல தேர்தல் தொகுதியின் பல்லேகம நகரத்திற்கு அண்மையில் களுகங்கைக்கு குறுக்காக களுகங்கை நீர்தேக்கம் நிருமாணிக்கப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்திக்கான சவுதி நிதியம், அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியம், சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் ஆகியன களுகங்கை நீர்தேக்கத்தை நிருமாணிப்பதற்காக கூட்டாக நிதி வழங்குகின்றன அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் அனுசரணையான ஆகக்குறைந்த விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்து அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.