• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி வீதி மற்றும் ஆர்.ஏ.த மெல் மாவத்தையை நவீனமயப்படுத்தல் - லிபேர்ட்டி சுற்றுவட்டத்திலிருந்து தர்மாராம வீதி சந்திவரை
- கொழும்பு தலைநகர அபிவிருத்திக் கருத்திட்டம் மீள் நிருமாணிப்பு, அபிவிருத்திக்கான சருவதேச வங்கியினால் கடன் உதவி வழங்கப்படும் உலக வங்கிக் கருத்திட்டமொன்றாவதோடு, இதன் மூலம் கிடைக்கும் கடன் உதவியைப் பயன்படுத்தி கொழும்பு தலைநகரம் சார்ந்த பிரதேசங்களில் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் பல செயற்படுத்தப்பட்டுள்ளன. லிபேர்ட்டி சுற்றுவட்டத்திலிருந்து தர்மாராம வீதி சந்திவரை காலி வீதி மற்றும் ஆர்.ஏ.த மெல் மாவத்தையை நவீனமயப்படுத்துதலும் இந்தக் கருத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் அனுசரணையான ஆகக்குறைந்த விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.