• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் நிலைபேறுடைய உயிர்த்தொகுதி வலுசக்தி உற்பத்தியையும் புதிய உயிர்சக்தி தொழினுட்பத்தையும் பிரபல்யப்படுத்தும் கருத்திட்டம்
- மாற்றுநிலை சக்தியுடனான நீர், நிலக்கரி, இயற்கை எரிபொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலங்கையில் தற்போது நீர் மின்சாரமும் அனல் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றைவிட வளிசக்தி, சூரியசக்தி, மற்றும் உயிர்தொகுதி வலுசக்தி பயன்படுத்தப்பட்டு சிறிய அளவிலான மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றது. இலங்கையில் நிலையான உயிர்த்தொகுதி வலுசக்தி உற்பத்தியையும் நவீன உயிர்சக்தி தொழினுட்பத்தையும் பிரபல்யப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பு ஆகியவற்றின் தலையீட்டின் ஊடாக உலகளாவிய சூழல் வசதிகள் மூலம் 1.9 ஐ.அ.டொலர்களைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் ஐந்து (05) வருடகால (2013 - 2017) கருத்திட்டத்திற்கு நிதி கொடையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.