• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு கடுகதி வீதியை மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை நீடித்தல் - மூன்று (03) சிவில் வேலைகள் ஒப்பந்தங்களை வழங்குவதற்காக அங்கீகாரம் கோரல்
- தெற்கு கடுகதி வீதியின் 95.275 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட கொட்டாவ தொடக்கம் காலி (பின்னதூவ) வரையிலான பகுதி ஏற்கனவே நிருமாணிக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 30.25 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட காலி (பின்னதூவ) தொடக்கம் மாத்தறை (கொடகம) வரையிலான பகுதியின் நிருமாணிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, இந்தப் பகுதியும் போக்குவரத்துக்காக குறுகிய காலத்திற்குள் திறக்கப்படவுள்ளது. தெற்கு கடுகதி வீதியை மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை அண்ணளவாக 96 கிலோ மீற்றர் தூரம் நீடிப்பதானது அம்பாந்தோட்டை சருவதேச மைய அபிவிருத்திக் கருத்திட்டத்தின் செயற்பாடுகளுக்கு வசதிகளை வழங்குவதற்குத் தேவையான வீதி வலையமைப்பு அபிவிருத்தி நோக்கத்திற்கு உரியதான பிரதான பிரிவவொன்றாகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பின்வரும் ஒப்பந்தங்களை வழங்குவதற்கு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மாத்தறை - பெலியத்த வீதி - 30 கி.மீ
* பெலியத்த - வெட்டிய வீதி - 26 கி.மீ
* அன்தரவெவ ஊடாக மத்தள - அம்பாந்தோட்டை - 25 கி.மீ