• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மானிடவியல் பீடத்திற்கு இரண்டு (02) மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணித்தல் - களனி பல்கலைக்கழகம் (K20 கட்டடத்தின் மூன்றாவது கட்டம்)
- களனி பல்கலைக்கழகத்தினால் ஈட்டிக் கொள்ளப்பட்ட வருமானத்தின் கீழ் 35 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் களனி பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பீடத்திற்கான இரண்டு (02) மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும், இந்தப் பணிகள் உரிய காலப் பகுதிக்குள் பூர்த்தி செய்வதற்கும் உட்பட்டு, நிருமாணிப்புப் பணிகளை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.