• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முகாமைத்துவக் கல்வி, வர்த்தக விஞ்ஞான பீடத்தின் மேலதிக மாணவர் உள்வாங்கலுக்கு வசதிகளைச் செய்யும் பொருட்டு நான்கு (04) மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல் - ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
- 137.30 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கல்வி, வர்த்தக விஞ்ஞான பீடத்தின் மேலதிக மாணவர் உள்வாங்கலுக்கு வசதிகளைச் செய்யும் பொருட்டு நான்கு (04) மாடிக் கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும், உரிய காலப் பகுதிக்குள் இந்த நிருமாணிப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும் உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.