• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு / வெளிநாட்டு நிதியங்களின் மூலம் வீதிப்பகுதிகளைப் புனரமைப்புச் செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட அந்தந்த கொள்வனவுக் குழுக்களினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு பொது திறைசேரியின் பணிப்புகளுக்கு உட்பட்டு, உள்நாட்டு / வெளிநாட்டு நிதியங்களின் மூலம் பின்வரும் வீதிகளின் பகுதிகளை புனரமைப்புச் செய்வது தொடர்பில் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராகிய அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

உள்நாட்டு வங்கியினால் வழங்கப்படுகின்ற நிதியத்தின் மூலம் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித் திட்டங்கள் -

* அம்பேபுஸ்ஸ - குருநாகல் - திருகோணமலை வீதி (A6) - கலேவலையிலிருந்து தம்புள்ளை வரை (14 கி.மீ.)
* வத்தளை - மஹர வீதி (B460) (0-7.24 கி.மீ.)
* வரக்காபொல - அங்குறுவெல்ல - கரவனெல்ல வீதி (B499) - (0-12.50 கி.மீ.)
* கிரிந்த - பலட்டுபான - யால வீதி (B499) - (0-12.50 கி.மீ.)
* பஸ்ஸர - மொனறாகலை வீதி (A22) - (0-27.0 கி.மீ.)
* தல்தூவ - மீவிட்டிகம்மன வீதி (B408) - (0-17.30 கி.மீ.)
* தல்கொடபிட்டிய - யட்டவத்த - தொம்பவெல வீதி (B409) - (0-26.40 கி.மீ.)
* பொலன்னறுவை - ஹிங்குரக்கொட வீதி (B552) - (2.0-13.65 கி.மீ.)
* நாரம்மல - தங்கொட்டுவ வீதி (B308) - (16.03 - 45.25 கி.மீ.)
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தினால் நிதியளிக்கப்படும் கருத்திட்டம் -

* கொழும்பு - கண்டி (A1) நெடுஞ்சாலையின் பேலியகொடையிலிருந்து கிரிபத்கொடை வரையிலான வீதிப் பகுதி (5.86 - 13.10 கிலோ மீற்றர் )
"கிழக்கின் உதயம்" துரித அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அல்லது கிழக்கு மாகாணத்திற்கு நுழைவதற்கான 153.67 கிலோ மீற்றர் முழுத்தூரத்தைக் கொண்ட ஏழு (07) வீதிகளின் பகுதிகள் -

* A 17 - காலி - தெனியாய - பெல்மடுல்ல வீதி (தெனியாயவிலிருந்து மாதம்பே வரை) - 51.90 கி.மீ
* A 27 - அம்பாறை - உகன - மகாஓயா வீதி - 27.83 கி.மீ
* B 73 - தடயன்தலாவ - உகன வீதி - 24.79 கி.மீ
* B 77 - சவலக்கடை - தடயன்தலாவ வீதி - 24.79 கி.மீ
* B 187 - கல்முனை - சவலக்கடை வீதி - 24.79 கி.மீ
* B 502 - மன்னம்பிட்டி - அரலகன்வில - மாதுறுஓயா வீதி - 30.00 கி.மீ
* B 1 - அக்கரைப்பற்று - வரிப்பத்தான்சேனை வீதி - 19.15 கி.மீ
அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தினால் நிதியளிக்கப்படும் கருத்திட்டம் -

* எஹலியகொடை - தெஹிஓவிட்ட வீதிப் பகுதி - (B110) - 0.00 - 16.69 கி.மீ
* அத்துல்கோட்டை - கொகுவல வீதிப் பகுதி - (B120) - 0.00 - 5.95 கி.மீ
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் கருத்திட்டம் -

* கொழும்பு இரத்தினபுரி வீதி - நுகேகொடையிலிருந்து ஹோமாகம வரையிலான வீதிப் பகுதி - (1.0 கி.மீ - 15.36 கி.மீ.)