• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெண்பிரம்பு பயன்படுத்துபவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு
- கண்பார்வையற்றவர்கள் அங்குமிங்கும் செல்லும் போது அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கும் வெண்பிரம்பு உபயோகப்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே நாட்டில் சுமார் 200,000 கண்பார்வையற்றவர்களினால் வெண்பிரம்பு உபயோகப்படுத்துகின்ற போதிலும் 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க வலது குறைந்தோர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தில் இது தொடர்பில் எந்தவொரு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் சமூக சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பீலிக்ஸ் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு அமைச்சரவையினால் பரிசீலனை செய்யப்பட்டதுடன், விசேட தேவைகளுடான சகலருக்கும் சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் சட்டம் ஆக்கப்படல் வேண்டும் என அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.