• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காகவும் பாற்பண்ணைகளின் விளைவுப் பெருக்கத்தை அதிகரிப்பதற்காகவும் முலை அழற்சி கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்
- முலை அழற்சி உள்நாட்டு கறவை மாடுகளின் பால் உற்பத்தி மற்றும் பாலின் தரம் என்பவற்றிற்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதும் பரந்தளவில் காணப்படுகின்றதுமான நோய் ஆகும். இந்த நோயானது கறவை மாடுகளின் முலைகளுக்கு தாக்கங்களை ஏற்படுத்துவதாகும். கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் (VRI) மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற முலை உட்செலுத்தல் மருந்தின் உற்பத்தி ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் தேசிய முலை அழற்சி கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நாடுபூராவும் நடைமுறைப்படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. கால்நடைவளர்ப்பு, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த பிரேரிப்புத் தொடர்பில் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.