• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு ஒப்பந்தக்கார்கள் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளின் 35. புனரமைப்பிற்காக உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நிகழ்ச்சித்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையிற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம், உள்நாட்டு வங்கிகளினால் வழங்கப்படும் நிதியங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களின் மூலம் பின்வரும் நெடுஞ்சாலைகளையும் / பாலங்களையும் புனரமைப்பதற்கு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகை சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. :

கலுகமுவ – விலகட்டுபொத்த வீதி (B190) 0கிலோ மீற்றரிலிருந்து 21.180 கிலோ மீற்றர் வரை ;
* கொழும்பு - கண்டி வீதியின் (A1) கடவத்த – நிட்டம்புவ வரை 23.00 கிலோ மீற்றர் கொண்ட வீதிப் பகுதி ;
* கொழும்பு - கண்டி வீதியின் (A1) நிட்டம்புவயில் இருந்து கண்டிவரை 40.54 கிலோ மீற்றரிலிருந்து 114.50 கிலோ மீற்றர் வரையான பகுதி; அத்துடன்
* காலியிலிருந்து தெனியாய (A14) 78.20 கிலோ மீற்றர் வரையான பகுதி.