• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் 68 வது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்கள் ஐக்கிய அமெரிக்க குடியரசின் நியூயோர்க் நகரத்திற்கு மேற்கொண்ட விஜயம்
- அதிமேதகைய சனாதிபதியின் மேற்போந்த விஜயம் தொடர்பிலான அறிக்கை வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிகழ்த்திய அவருடைய உரையில் குறிப்பிடப்பட்ட ஏனைய விடயங்களுள், அனைத்து சருவதேச உறவுகளை பேணும் போது நீண்டகாலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவிதியான எல்லா நாடுகளையும் சமமாக மதிக்கும் கோட்பாட்டை பாதுகாக்கும் அத்துடன் அதற்கமைவாக செயலாற்றும் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி அனர்த்தம், உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி, நீண்டகாலம் நிலவிய பிரச்சினையான சூழல் ஆகியவற்றை எதிர்கொண்டு சமூக மற்றும் பொருளாதார துறையில் இலங்கை எய்திய மெச்சத்தகு வெற்றி பற்றி அதிமேதகைய சனாதிபதியினால் பொதுச்சபைக்கு தெளிவுபடுத்தப்பட்டது. சருவதேச ஆற்றல் தினமொன்றை பிரகடனப்படுத்துமாறும் அவர் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சுமார் இருப்பத்தைந்து வருடங்களின் பின்னர் வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டதாக குறிப்பிட்ட அதிமேதகைய சனாதிபதி அவர்கள், அரசியல் ரீதியில் பலப்படுத்துதல் அத்துடன் சமூக ஒருமைப்பாட்டினை கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் காட்டி, அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த பணிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவதும் நாட்டின் முழு மக்களினதும் நலனின் பொருட்டு இந்த பணிகளை வெற்றி கொள்வதை உறுதி கொள்வதும் சருவதேச சமூகத்தின் தெளிவான பொறுப்பாகும் எனவும் வலியுறுத்தினார். அவருடைய உரையின் முடிவில், ஐக்கியநாடுகளின் நடவடிக்கை முறையை பின்பற்றி அது தொடர்பில் அறிந்து கொள்ளத்தக்க முன்னேற்றம் அடைந்திருக்கின்ற போதிலும் இலங்கை தொடர்பில் தேவையற்ற விதத்தில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதும் பலநாடுகள் கட்டமைப்பிற்குள் சமமற்ற விதத்தில் மதித்தல் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ள அதிமேதகைய சனாதிபதி அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளின் அடிப்படை எதுவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார். சில நாடுகளின் அரசாங்க தலைவர்களுடனும் ஐக்கியநாடுகளினும் பொதுநலவாய நாடுகளினதும் பொதுச் செயலாளர்களுடனும் இருபக்க கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.