• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"கிழக்கு மாகாண நீர் வழங்கல் அபிவிருத்திக் கருத்திட்டம் - கோணேசபுரம், தடயந்தலாவ ஆகிய பிரதேசங்களுக்கு விநியோக முறைமைக்காக PE குழாய்கள், பொருத்திகள் DI/CI வால்வுகள் மற்றும் துணைக்கருவிகளைப் பதித்தல் - ஒப்பந்த இல. P&D/Laying/JICA/EP16/2013/01
- மேற்போந்த கருத்திட்டம் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பின் கீழும் யப்பான் சருவதேச ஒத்துழைப்பிற்கான முகவராண்மையின் கடன் உதவியின் கீழும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும். மேற்போந்த கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.