• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தாபன விதிக்கோவையின் VI ஆம் அத்தியாயத்தின் 2:5 ஆம், XII ஆம் அத்தியாயத்தின் 1:5 ஆம், XXVIII ஆம் அத்தியாயத்தின் 6:4 ஆம் உபபிரிவுகளைத் திருத்துதல்
- அரசாங்க உத்தியோகத்தர்களினால் முக்கியமாக முன் அங்கீகாரமின்றி அவசரவிடயமொன்றுக்காக கடமைக்கு சமூகமளிக்க முடியாதவிடத்து அது பற்றி திணைக்களத் தலைவருக்கு அறிவிக்கும் முறையொன்றாக பயன்படுத்திவந்த தந்திச் சேவை 2013‑10‑01 ஆம் திகதி தொடக்கம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆதலால், அஞ்சல் திணைக்களத்தினால் தந்திச் சேவைக்குப் பதிலாக மாற்றுவழியாக அறிமுகப்படுத்தியுள்ள ரெலி - மேல் சேவை மூலம் அனுப்பப்படும் செய்தி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு லீவு பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆவணமொன்றாக ஏற்றுக் கொள்வதற்கும் இதற்கமைவாக தாபன விதிக் கோவையிலுள்ள ஏற்பாடுகளுக்குத் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கும் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.