• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிமேதகைய சனாதிபதியின் மக்கள் சீன குடியரசிற்கான உத்தியோகபூர்வ சுற்றுலா
- அதிமேதகைய சனாதிபதி அவர்கள் அண்மையில் மக்கள் சீன குடியரசிற்கு உத்தியோகபூர்வ சுற்றுலாவொன்றை மேற்கொண்டதோடு, பின்வரும் விடயங்களின் மீது, இந்த உத்தியோகபூர்வ சுற்றுலா இருபக்க ரீதியில் மிக வெற்றிகரமான சுற்றுலாவொன்றாகும்.

* கடல்சார் பாதுகாப்பு, கடல்கொள்ளைகளை தடுத்தல், தேடல், உயிர்காப்பு மற்றும் கடல்பயணப் பாதுகாப்புத் தொடர்பிலான ஒத்துழைப்பினை பலப்படுத்துவது சம்பந்தமாக இருநாட்டு அரசாங்க தலைவர்களினாலும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது ;

* 1.3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் உள்ள உலகின் இரண்டாவது பெரிய ஆடம்பர சந்தையில் நுழைவதற்கான வாய்ப்பினை இலங்கைக்கு ஏற்படுத்திக் கொடுத்து, இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று இருநாடுகளினதும் அரசாங்க தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்டமை பொருளாதார ரீதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட முக்கிய வெற்றியாகும். இதன் மூலம் முதலீட்டுத் துறையின் மூலமும் இலங்கைக்கு கூடிய நன்மை கிடைக்குமென்பதோடு, இலங்கைக்கு சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் இந்த உடன்படிக்கை ஏதுவாயமையும்;

* சருவதேச மாநாட்டு நிலையமொன்றை கண்டி நகரத்திலும் கலாசார மண்டபமொன்றை அநுராதபுரம் நகரத்திலும் நிருமாணிக்கும் பொருட்டு பயன்படுத்துவதற்காக 200 மில்லியன் ஆர்எம்பீ யுவான் கொடையொன்றை வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்துள்ளது;

* சீனாவின் நன்கொடையின் மீது ஹோமாகம நகரத்தில் தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரி நிருமாணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது;

* மக்களுக்கிடையில் கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்தல், கல்வி, கலாசார, மத, அச்சு ஊடகம், வானொலி, தொலைக்காட்சி உட்பட ஏனைய துறைகளில் ஒத்துழைப்பு, அறிவுசார் பரிமாற்றத்தை பலப்படுத்தல் உட்பட மகளிர் சிவில் குழுக்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பலப்படுத்துதல்;

* மேலும் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையொன்றாக கமத்தொழில் அபிவிருத்திக்கு உதவி வழங்குவதற்கு சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளதோடு, இலங்கைக்கு சிறு இயந்திர சாதனங்களை வழங்குவதற்கும் முன்வந்துள்ளது;

* விண்வெளித்துறை ஒத்துழைப்பு, தொலைத்தொடர்பு, வானொலி ஒலிபரப்பு, அனர்த்த முகாமைத்துவம், சுனாமி மேற்பார்வை, சுற்றாடல் பாதுகாப்பு, இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி வழங்கும் துறைகளில் அறிவுசார் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் பலப்படுத்துவதற்கு அரசாங்க தலைவர்கள் உடன்பாட்டினைத் தெரிவித்தனர்.