• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொது திறைசேரி மனயைிடத்திலுள்ள கட்டடத்திற்கு அருகாமையில் புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
- பொது திறைசேரிக்குத் தேவையான மேலதிக இடவசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு பொது திறைசேரி மனையிடத்திலுள்ள கட்டடத்திற்கு அருகாமையில் புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும் 2013 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டில் குறித்தொதுக்கப்பட்டுள்ள 575 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடுகளின் மூலம் இயைபுள்ள நிருமாணிப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்கும் தேவையான மீதி நிதி ஏற்பாடுகள் 2014 ஆம் 2015 ஆம் ஆண்டுகளில் வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.