• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கே/புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் மண்சரிவினால் அப்புறப்படுத்தப்பட்ட டபிள்யு.ஏ.சில்வா கட்டடத்திற்குப் பதிலாக நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள நான்கு (04) மாடிக் கட்டடத்தையும் சேதமடைந்துள்ள அதற்கண்மித்த பிரதான மண்டபத்தையும் நவீனமயப்படுத்தல்
- கே/புனித ஜோசப் மகளிர் கல்லூரியில் சுமார் 4,500 மாணவிகள் கல்வி கற்பதோடு, இந்தக் கல்லூரி கண்டி - கொழும்பு நெடுஞ்சாலைக்கருகாமையில் அமைந்துள்ளது. அண்மையில் எற்பட்ட மண்சரிவினால் பாடசாலையின் பக்கச் சுவருக்கு அண்மையில் அமைந்திருந்த டபிள்யு.ஏ.சில்வா மண்டபம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதற்கண்மையில் அமைந்திருந்த பிரதான மண்டபத்தின் ஒருபகுதியும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தினால் இயைபுள்ள பிரதேசத்தை பரிசோதனை செய்து, கல்வி அமைச்சினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அதன் அவதானிப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய நான்கு மாடிக் கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும் பகுதியளவில் சேதமடைந்த பிரதான மண்டபத்தை புனரமைப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டிற்குரிய செலவுகள் ஏற்கனவே குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டுக்குள் முகாமித்துக் கொண்டு இந்த நிருமாணிப்பு வேலைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கும் மீதி நிதி ஏற்பாடுகளை 2014 ஆம் ஆண்டில் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களுக்கு அமைவாக பாடசாலையின் பக்கச்சுவரை வீதி அபிவிருத்தி அதிகாரசபையைக் கொண்டு நிருமாணித்துக் கொண்டதன் பின்னர், இந்த நிருமாணிப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்கும் கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.