• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரசாயன உரம் மற்றும் கம இரசாயனப் பொருட்களை அசட்டையாக பயன் & படுத்துதலும் வடமத்திய மாகாணத்தில நிலவும் சிறுநீரக நோய்களும்
பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதனையும் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு இரசாயன உரம் மற்றும் கம இரசாயனப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, இவற்றின் பாவனையின் மூலம் தன்னிறைவான நிலைக்கு அண்மிப்பதற்கு இயலுமானாலும் நாடு பல்வகை உயிரின பாதிப்புக்கும், இரசாயனப் பொருட்களின் விளைவாக நீர் மற்றும் மண் மாசடைதல் போன்ற பிரதிகூலமான பாதிப்புகளுக்கும் முகம் கொடுப்பதற்கு நேர்ந்துள்ளமையும் இதன் விளைவாக வடமத்திய மாகாணத்தில் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் விசேடமாகக் கொண்டு பலவகையான சுகாதாரப் பிரச்சினைகள் எழுந்துள்ளமையும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கிராமிய அலுவல்கள் பற்றிய (சிரேட்ட) அமைச்சர் மாண்புமிகு அதாவுத செனெவிரத்ன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் 13 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றினால் இது சம்பந்தமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அமைச்சரவை உபகுழுவின் நோக்கங்களுக்கு இயைபுள்ள அமைச்சுக்களின் செயலாளர்களும் 58 நிபுணர்களும் பங்களிப்பு நல்கினர். கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 19 நீண்டகால நடவடிக்கைகளும் 10 குறுகிய கால நடவடிக்கைகளும் தொடர்பிலான சிபாரிசுகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப் பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சரினதும் நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரினதும் அவதானிப்புரைகளுக்கு உரிய கவனம் செலுத்தி இந்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த சிபாரிசுகளின் நடைமுறைப்படுத்தலை மேற்பார்வை செய்யும் பொருட்டு அமைச்சரவை உபகுழுவொன்றும் உத்தியோகத்தர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.