• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையின் கூட்டு விடுதிகளை தாபிப்பதற்கும் அதன் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்குமான பிரேரிப்பு
- 350 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட முதலீட்டுடனான இந்தக் கருத்திட்டத்தில் ஆகக்குறைந்தது 400 அறைகளைக் கொண்ட ஹோட்டல் ஒன்றும் மாநாட்டு வசதிகள் சிற்றூண்டிச்சாலை மற்றும் ஏனைய இடைநேர் விளைவான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் மூலம் 2600 உள்நாட்டவர்களுக்கு நேரடித் தொழில்வாய்ப்பு உருவாகுவதுடன் மறைமுகத் தொழில் வாய்ப்புகளும் இதன் மூலம் உருவாகும். இந்தக் கருத்திட்டத்தை வழங்குவதற்கு உரியதான தொடர் நடவடிக்கைகளுக்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.