• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு 02 கிளேனி வீதியின் நீதிபதி அக்பர் மாவத்தையில் தாபிக்கப்படவுள்ள கூட்டு சுற்றுலா கைத்தொழில் சார்ந்த கருத்திட்டம்
- 650 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட முதலீட்டுடன் நிருமாணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற காலப்பகுதியில் 3,000 தொடக்கம் 4,000 வரையிலான நேரடியான தொழில் வாய்ப்பு கிடைக்குமென்பதுடன் இதற்கு மேலதிகமாக வியாபாரத் தொழிற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் 3,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புக் கிடைக்கின்ற மாநாட்டு நிலையம், களியாட்டவசதிகள் சருவதேச நியமங்களுக்கு ஏற்புடைத்தான வியாபாரக் கட்டடத்தொகுதிகள், சொகுசு வாய்ந்த தொடர் வீடமைப்புத் தொகுதியையும் அலுவலக இடவசதிகளையும் கொண்ட பல் / கலப்பு ஆடம்பர கூட்டு விடுதியொன்றைத் தாபிப்பதற்கு 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம் வழங்கக் கூடியவாறான விடுவிப்புகளை வழங்குவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.