• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பால் சமத்துவம் மற்றும் 2015 ஆம் ஆண்டிற்குப் பின்னரான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் தொடர்பிலான 9வது வலய பெண் அமைச்சர்கள் அத்துடன் பராளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு தொடர்பில் இலங்கையின் பிரதிநிதித்துவம் சம்பந்தமான சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களின் குறிப்பு
- சனத்தொகை மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான ஆசிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் (AFPPD) மற்றும் சிறுவர் சனத்தொகைக்கும் அபிவிருத்திக்குமான கொரிய பாராளுமன்ற லீக்குடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து கொரிய திட்டமிடல் சனத்தொகை சபையும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினதும் (UNFPA) யப்பான் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினதும் ஒத்துழைப்புடன் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் தென்கொரியாவின் சோல் நகரத்தில் நடாத்தப்பட்ட மேற்போந்த மாநாட்டுக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களின் தலைமையின் கீழ் இரண்டு (02) பிரதி அமைச்சர்களை உள்ளடக்கியதான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 15 க்கும் மேற்பட்ட ஆசிய பசுபிக் வலய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 45 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்கள் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறுபட்ட வன்முறைகளையும் இல்லாதொழிப்பதற்கும் பால்சமத்துவத்தை இலங்கையில் பேணுவதன் பொருட்டும் பால்சமத்துவம், இனம், மதம் அல்லது குலபேதம் இல்லாது சகல பிரஜைகளுக்கும் கல்வி, சுகாதார தொழில்வாய்ப்புகளை வழங்குவது பற்றியும் சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சும் இலங்கை அரசாங்கமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் பற்றியும் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டோர் இலங்கை அடைந்துள்ள புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகள், விசேடமாக உயர் கல்விஅறிவு, வாழ்க்கைத்தொழில் கல்வியின் போது பெண்களின் பங்களிப்பு குறைந்த மட்டத்திலான தாய்சேய் மரண வீதாசாரம் ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலைக் கல்வியின் போது பெண்பிள்ளைகளின் ஒத்துழைப்பு உயர் வீதாசாரத்துடனும் தொழில் பார்க்கும் பெண்களின் உயர் வீதாசாரம் போன்றவை பற்றி பாராட்டினர். சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் பாராட்டப்பட்டதுடன், கவனத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டன.