• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேஸ்லைன் பாதையின் களனிதிஸ்ஸ சுற்றுவட்டத்திலிருந்து மயான சுற்றுவட்டம் வரையிலுள்ள (கி.மீ 0.00-கி.மீ 4.80 ) பகுதியின் பாதை மேற்பகுதியை மீள செப்பனிடுதலும் விருத்தி செய்தலும்
- பேஸ்லைன் பாதையின் களனிதிஸ்ஸ சுற்றுவட்டத்திலிருந்து மயான சுற்றுவட்டம் வரையிலுள்ள (கி.மீ 0.00-கி.மீ 4.80 ) பகுதி 6 ஓடு பாதைகளைக் கொண்ட இரட்டை வீதிகளைக் கொண்டதாகும். மிகச் சிறந்த சேவையை வழங்குவதற்காக இந்தப் பகுதிக்கான பாதையின் மேற்பகுதியை செப்பனிடும் பணிகளை துரிதப்படுத்தும் தேவையுள்ளது. இது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமோதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.