• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கலேவெல பிரதேச செயலகத்திற்கு புதிய இரண்டு மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
- கலேவெல பிரதேச செயலாளர் பிரிவிற்குள் 59 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளதோடு, இதன் மொத்த சனத்தொகை சுமார் 75,000 ஆகும். இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவதற்காக 50 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் கலேவெல பிரதேச செயலகத்திற்குப் புதிய இரண்டு மாடிக் கட்டடமொன்றை நிருமாணிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.