• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலர் வலய நகர நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக் கருத்திட்டம் - இலங்கை ADB GRANT No. 2477 SRI (SF)- மன்னார் நீர் களஞ்சியப்படுத்தும் நீர்தொட்டிகள் மற்றும் நீர் தாங்கிக் கோபுரங்களை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தம்
- நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடனும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழும் மேற்போந்த கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. புத்தளம், சிலாபம், வவுனியா, மன்னார் ஆகிய நான்கு (04) நகரங்களுக்குமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கருத்திட்டம் 15 ஒப்பந்த பொதிகளைக் கொண்டுள்ளதோடு, இதில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் ஒன்றே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு நிலக்கீழ் நீர்த்தொட்டிகள் இரண்டு உயர் நீர்க்கோபுரம் ஒன்று, குளோரினிடல் முறைமையொன்று ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையினால நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டடுள்ளவாறு இந்த ஒப்பந்தத்தை ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.