• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பங்களாதேஷ் டாக்கா நகரில் நடாத்தப்பட்ட 10வது பொதுநலவாய நாடுகளின் மகளிர்விவகாரம் தொடர்பான அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொண்ட சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களின் குறிப்பு
- லண்டன் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தின் அனுசரணையின் கீழ் அண்மையில் பங்களாதேஷ் டாக்கா நகரில் நடாத்தப்பட்ட மேற்போந்த மாநாட்டில் சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டிற்கு 30 நாடுகளின் சுமார் 250 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கல்வி, எழுத்தறிவு, தொழில் வெற்றிகள், பொறுப்புகளை வகிக்கும் விருப்பம் போன்ற துறைகளில் இலங்கை பெண்கள் இதில் கலந்துகொண்ட ஏனைய நாடுகளை விட உயர்மட்டத்தில் உள்ளமை தெரியவந்தது

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.