• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கான வதிவிட இராஜதந்திர தூதரகமொன்றை சீசெல்ஸ் குடியரசின் விக்டோரியா நகரத்தில் தாபித்தல்
- சீசெல்ஸ் குடியரசு ஆபிரிக்க வலயத்தில் செயற்பாட்டு ரீதியிலான நாடுகளில் ஒன்றாகும். சீசெல்சுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை தூதரக மட்டத்தில் 1988 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதோடு, தற்போது பிரிட்டோரியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சீசெல்ஸ் நாட்டுக்கும் தத்துவம் பெற்றுள்ளார். இந்த ஆண்டின் யூன் மாத இறுதியில் இலங்கையின் அதிமேதகைய சனாதிபதி அவர்கள் சீசெல்சுக்கு இராஜதந்திர விஜயமொன்றை மேற்கொண்டதோடு, இந்த இராஜதந்திர விஜயத்தின் போது இருநாட்டு தலைவர்களினாலும் இருநாடுகளுக்குமிடையில் பொருளாதார, இராஜதந்திர உறவுகளை விரிவாகவும் ஆழமாகவும் மேம்படுத்துவதற்கு விருப்பம் தெரிவித்தனர். இந்த உத்தியோபூர்வ விஜயத்தினால் கிடைத்த சில நன்மைகளாவன :

* இருநாடுகளிக்குமிடையில் இலங்கை விமான சேவையினதும் மிஹின் லங்கா விமான சேவையினதும் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்தல் ;

* இலங்கை மத்திய வங்கியின் உடன்பாட்டுடன் இலங்கை வங்கியினால் சீசெல்ஸ் நகரத்தில் அதன் கிளையொன்று தாபிக்கப்பட்டமை;

* இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் அதன் கிளையொன்றை சீசெல்ஸ் நகரத்தில் தாபிக்கப்பட்டமை ; அத்துடன்

* இலங்கை நவலோகா கூட்டு தொழில் முயற்சியினால் மருத்துவசாலையொன்றை தாபிப்பது பற்றி பரிசீலனை செய்யப்பட்டமை

சீசெல்ஸ் குடியரசின் விக்டோரியா நகரத்தில் வதிவிட இராஜதந்திர தூதரகமொன்றை தாபிப்பதற்கும் இது சம்பந்தமான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும், வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.