• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
(அ) சருவதேச பயங்கரவாதம், நாடு கடந்து திட்டமிட்டு மேற்கொள்ளுகின்ற குற்றச் செயல்களையும் சட்ட விரோதமாக மேற்கொள்ளுகின்ற போதைப் பொருள்களை எடுத்துச் செல்வதையும் தடுப்பதற்குமான ஒத்துழைப்பு தொடர்பில் பல்துறை சார்ந்த தொழினுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா சார்ந்த நாடுகளின் (BIMSTEC) சமவாயம்
(அ)
இந்த சமவாயத்தின் பிரதான அங்கமானது -

* உறுப்பாண்மை நாடுகளில் சட்டத்தை அமுல்படுத்தும் முகவராண்மைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிப் பதுடன், பரஸ்பரம் ஊக்கமுள்ள துறைகள் தொடர்பிலான அனுபங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒத்துழைப்பை உருவாக்குதல்;

* பயங்கரவாதம், நாடு கடந்து திட்டமிட்டு மேற்கொள்ளுகின்ற குற்றச் செயல் மற்றும் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருட்களை எடுத்துச் செல்தல் ஆகியவற்றுக்கு நிதி வழங்குவது தொடர்பில் தகவல்களை பகிர்ந்து கொள்தலும் பரிமாறிக் கொள்தலும்;

* குற்றவியல் நடவடிக்கைகள், கைதுசெய்தல், வேற்றரசுக்கு ஒப்படைத்தல் தொடர்பிலான சமவாயத்தின் விடய நோக்கெல்லைக்குள் வரும் குற்றங்களில் ஈடுபடுகின்ற ஆட்களுக்கும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பிற்கான வசதிகளை வழங்கும் முறை மற்றும் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

(ஆ)
இந்த அமைப்பின் பிரதான நோக்கமானது -

* வலயத்திற்கு ஏற்புடைத்தான சக்தி மற்றும் அது தொடர்பிலான தரவுத் தளமொன்றை முகாமித்தலும் மதிப்பிடுதலும்;

* இந்த வலயத்திலுள்ள தேசிய மட்டத்திலான நிறுவனங்களுக் கிடையே வலையமைப்பு கட்டமைப்பொன்றை தயாரித்தலும் அதற்கமைவாக நடவடிக்கை எடுத்தலும் ; அத்துடன்

* ஆற்றல் அபிவிருத்திக்கும் விசேட தொழில்முறை தொடர்பிலான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்குமான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளல்.

மேற்போந்த நடவடிக்கைகளுக்கு உரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.