• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக காணியொன்றைக் கொள்வனவு செய்தல்
- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கை 5,700 ஆகும். இந்த பல்கலைகழகத்தில் விஞ்ஞாபனம், கலை, (சட்டப்பிரிவும் உள்ளடங்கலாக) முகாமைத்துவமும் வர்த்தகமும் அத்துடன் மருத்துவம் (சுகாதார சம விஞ்ஞான பிரிவும் உள்ளடங்கலாக) போன்ற பீடங்களும் சித்த மருத்துவப் பிரிவும் நடனக்கலை தொடர்பான இராமநாதன் அகடமியும் யாழ்ப்பாணத்தில் தாபிக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்திட்டம் யாழ்பாண பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கும் அதிகரிக்கின்ற மாணவர்களை உள்வாங்குவதற்கும் மிக முக்கியமான அபிவிருத்தி பணியாக இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், பல்கலைகழக பணிகளை விரிவாக்கும் நோக்கத்திற்காக இனங்காணப்பட்ட காணித்துண்டுகளை கொள்வனவு செய்வதற்கு உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.