• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெயட்ட கிருள தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2014 - கிராமிய மக்கள் சந்திப்பும் நடமாடும் சேவையும்
- தெயட்ட கிருள 2014 கண்காட்சிக்கு ஒருங்கிணைவாக குருநாகல், கேகாலை மற்றும் புத்தளம் போன்ற மூன்று மாவட்டங்களிம் உள்ள சகல கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கியவாறு சமூக நலனோம்பு சேவைகளும் நடமாடும் சேவைகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படை நோக்கங்களாவன :

* காணி, வீடமைப்பு உட்பட தனிநபர் மற்றும் குடும்பங்கள் சம்பந்தமான பிரச்சினைகளை இனங்காண்பதும் அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதும்;

* கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தோறும் மேம்படுத்த வேண்டிய பொது வசதிகளை இனங்காணல்;

* பல்வேறுபட்ட அரச நிறுவனங்களின் மூலம் கிராம மட்டத்தில் சேவைகளை வழங்குதல் ; அத்துடன்

* பொதுமக்களின் நலனோம்புகைக்காக கிராம மட்டத்தில் நடமாடும் சுகாதார சிகிச்சைகளை வழங்குதல்.