• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகைய சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் பெலாரெஸ் குடியரசுக்கு மேற்கொண்ட இராஜாங்க விஜயத்தின் மீதான அறிக்கை
- பெலாரெஸ் குடியரசு சனாதிபதியின் அழைப்பின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்கள் 2013 ஆகஸ்ட் 25-27 ஆம் திகதிகளில் பெலாரெஸ் குடியரசுக்கு இராஜங்க விஜயத்தை மேற்கொண்டதுடன் இது இலங்கை நாட்டுத் தலைவர் ஒருவர் பெலாரெஸ் குடியரசுக்கு மேற்கொண்ட முதலாவது இராஜங்க விஜயமாகும். இருநாட்டுத் தலைவர்களுக்கு இடையே நடாத்தப்பட்ட இரு தரப்புக் கலந்துரையாடல்கள், நட்புரீதியானதும் புரிந்துணர்வு ரீதியிலானதுமான திறந்த நோக்கத்தின் கீழ் நடைபெற்றதுடன் நன்மை தரக்கூடிய கருத்துக்கள் பரிமாறப்பட்டு, இருதரப்பு உறவுகளையும் சருவதேச நிகழ்ச்சி நிரலிலுள்ள புரிந்துணர்வுத் தேவைப்பாடுகளையும் மேலும் விருத்தியடையச் செய்வதையும் பலப்படுத்துவதையும் எதிர்கால எதிர்பார்ப்பாக உருவாக்கியுள்ளது. இந்த விஜயத்தின் போது எய்தப்பட்ட நன்மைகள் சில பின்வருமாறு :

* இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை விருத்தி செய்வதற்கு சந்தை மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவொன்றைத் தாபித்தல்;

* கமத்தொழில் பொறித்தொகுதிகளை பொருத்தி பொறித்தொகுதிக் கூடமொன்றை தாபிக்கும் நோக்கத்துடன் இலங்கையிலுள்ள தரப்பினர் ஒருவரை இனங்காண்பதற்கு பெலாரெஸ் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கும்;

* பசளை இறக்குமதிக்கு நியாயமான விலையை உருவாக்குவதற்கும்;

* பால் உற்பத்திக்கும் மாடுகளை வளர்க்கும் துறைக்குமான ஒத்துழைப்புக்கும்;

* விசேடமாக விஞ்ஞான மருத்துவத்துறைக் கல்விக்கும்;

* உயர்கல்விக்காக இருநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளலும்; அத்துடன்

* இலங்கையிலுள்ள சுதந்திர துறைமுக முறைமையிலும் சுதந்திர சந்தை உடன்படிக்கைகளிலும் உள்ள நன்மைகளை உபயோகப்படுத்திக் கொண்டு தெற்கு மற்றும் வழங்கும் பொருட்டு, பெலாரெஸிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படுகின்ற ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கும்.

இருதரப்பு தொடர்புகளை மேலும் அதிகரிப்பதற்கு பின்வரும் விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் / உடன்படிக்கைகள் ஒப்பமிடப்பட்டன:

* குற்றவியல் விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு சட்ட உதவிச் சேவைகளும்;

* சந்தை மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களும்;

* வருமானத்திற்காக அறவிடப்படுகின்ற குத்தகை தொடர்பில் குத்தகைத் தொகை விடுபடுவதை தடுத்தலும் இரண்டு தடவைகள் குத்தகைத் தொகை அறவிடவதைத் தடுத்தலும்; அத்துடன்

* சுற்றுலாத்துறை ஒத்துழைப்பும்.