• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தள ராஜபக்‌ஷ சருவதேச விமான நிலைய அபிவிருத்திக் கருத்திட்டம் - I ஆம் கட்டம்
- ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய (UNFPA) நியூயோர்க் அலுவலகத்தின் அனுசரணையுடன் தொகைமதிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான ஆசிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற மேலே குறிப்பிடப்பட்டுள்ள சருவதேச மாநாடு 2013 ஒக்ரோபர் மாதம் 3-4 ஆகிய இரு நாட்கள் இலங்கையில் நடாத்தப்படவுள்ளது. மாண்புமிகு பிரதம அமைச்சர் மாண்புமிகு டீ.எம்.ஜயரத்ன அவர்களும் மாண்பு சபாநாயகர் சமல்ராஜபக்ஷ அவர்களும் இந்த மாநாட்டில் சொற்பொழிவாற்று வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சந்திப்பின் அடிப்படை நோக்கமானது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசேட கவனத்தைச் செலுத்தி அவர்களின் நோக்கினூடாக தொகைமதிப்பு மற்றும் அபிவிருத்திக்கான சருவதேச மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் எய்தப்பட்ட உலகளாவிய முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதாகும். இந்த மாநாட்டில் எதிர்பார்க்கப்படும் நன்மைகளாவன தொகைமதிப்பு மற்றும் அபிவிருத்திக்கான சருவதேச மாநாட்டுக்கு 2014 க்கும் அப்பால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை முறையானவாறு விழிப்பூட்டி ஆயத்தப்படுத்துவதாகும். இந்த சந்திப்பு இலங்கையில் நடாத்துவதற்குத் தேவையான சகல செலவினங்களையும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய (UNFPA) நியூயோர்க் அலுவலகத்தின் மூலம் உறப்படுகின்றது. இந்த சந்திப்பை ஒழுங்குபடுத்தி இதை கொழும்பில் நடாத்துவதற்கு சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.