• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடமொன்றையும் அதற்கான நுழைவுப் பாதையொன்றையும் அமைத்தல்
- நடுத்தவணைக்கால வரவுசெலவுத் திட்ட எல்லைக்குட்பட்டு வழங்கப்படுகின்ற நிதி ஏற்பாடுகளின் மீது, காணி, காணி அபிவிருத்தி அமைச்சு அமைந்துள்ள மனையிடத்திற்கு அண்மையிலுள்ள காணித் துண்டில் அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு நிரந்தரக் கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும் அது தொடர்பில் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.