• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு 02, ஸ்டுவர்ட் வீதியிலுள்ள வேகந்த வீடமைப்புத் திட்டத்தில் குடியிருப்பவர்கள் ஆளாகக் கூடிய ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தலும் இந்த வீடமைப்புத் திட்டத்தை மீள நிருமாணித்தலும்
- ஏற்கனவே இந்த வீடமைப்புகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளமையினால் அவற்றின் பாரிய அனர்த்த ஆபத்துக்கள் உள்ளன. இதற்கமைவாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் நிருமாணிக்கப்பட்ட 114 வீடமைப்பு அலகுகளைக் கொண்ட நான்கு (04) மாடிக் கட்டடத்தின் குடியிருப்பாளர்களை துரிதமாக பிற இடங்களில் குடியமர்த்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த பிரேரிப்புத் தொடர்பில் இந்த வீடமைப்புத் திட்டத்தின் குடியிருப்பாளர்களை பிற இடங்களில் குடியமர்த்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கொழும்பு நகர வீடமைப்புக் கருத்திட்டத்தின் 114 வீடமைப்பு அலகுகளை குறித்தொதுக்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.