• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட மாகாணத்தில் பனஞ்செய்கை மீது தங்கியுள்ள 70,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்தல்
- வடமாகாணத்திற்குள் மாத்திரம் பத்து (10) மில்லியன் பனை மரங்கள் உள்ளமையும் இதன் மூலம் உணவு மற்றும் கைப்பணிப் பிரிவின் அபிவிருத்தி வீடுகளை உள்ளடக்கியதான இடங்களுக்கு வெட்டுமரங்களையும் ஓலைகளையும் வழங்குதல் மரபுரிமை கலாசாரத்தின் தோற்றம் அத்துடன் இயைபுள்ள பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களின் வருமானத்தை ஈட்டுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பு வழங்கியுள்ளது. வடமாகாணத்தின் பனஞ்செய்கை மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கியுள்ள குடும்ப எண்ணிக்கை 70,000 க்கும் அதிகமாகும். பனஞ்செய்கையின் மூலம் - .

* திரவம் சார்ந்த உற்பத்திகள் (கருப்பட்டி, பனம்பாணி,கள்ளு போன்றவை)

* பழவகை சார்ந்த உற்பத்திகள் ( குளிர்பானம், பனாட்டு, ஜாம் போன்றவை)

* ஓலை சார்ந்த உற்பத்திகள் (கைப்பணிப் பொருட்கள், கழிவுக்கூடை, பை, மேசைத்துடைப்பு போன்றவை)

* தும்பு சார்ந்த உற்பத்திகள் (தும்புத்தடி, தூரிகை போன்றவை)

* கிழங்கு சார்ந்த உற்பத்திகள் (ஒடியல், பனப்போசணை, பனங்கிழங்கு மா போன்றவை)

* மரம் சார்ந்த உற்பத்திகள் (வெட்டு மரங்கள், வீட்டுத் தளபாடங்கள் போன்றவை)

போன்ற பெறுமானங்களை இணைத்து பல்வேறுபட்ட பனஞ்சார்ந்த உற்பத்திகள் ஊடாக வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் பங்களிப்புச் செய்கின்றது.பனஞ்சார்ந்த கைப்பணிப் பயிற்சி, புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்கள் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னுரிமை அடிப்படையின் மீது அரசாங்கத்தின் தலையீடு தேவையென இனங்காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடுத்தவணைகால வரவுசெலவுத் திட்டக் கட்டமைப்புக்குள் பனை அபிவிருத்தி சபை ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.