• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜின் கங்கை வௌ்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை புனரமைக்கும் கருத்திட்டம்
- 70 ஆம் ஆண்டின் இறுதியில் சீன அரசாங்க உதவியுடன் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்தக் கருத்திட்டத்தின் தொழிற்பாடு 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் காலி மாவட்டத்தின் படல்கம, போப்பே - போத்தல, வெலிவிட்ட, திவிதுரே மற்றும் ஹிக்கடுவ பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளடக்கப்படுகின்றன. இந்தக் கருத்திட்டத்தின் பிரதான நோக்கம் ஜின் கங்கையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள 5000 ஹெக்டேயார் அளவிலான கமக் காணிகளுக்கு தொடர்ச்சியாக வௌ்ளப் பெருக்கினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை தடுப்பதும் இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் 20,000 குடும்பங்களைக் கொண்ட மக்களுக்கு வௌ்ளப் பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதாகும். இந்த ஜின் கங்கையின் வௌ்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் கருத்திட்டங்கள் பல காலமாகவுள்ள தேவைப்பாடு என கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் 700 மில்லியன் ரூபா மொத்த செலவினத்தில் இந்த வௌ்ளப் பெருக்கு கட்டுப்பாட்டு கருத்திட்டம் 2014 தொடக்கம் 2016 வரையிலான மூன்று (03) வருடகாலத்திற்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.