• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“Smart - Sri Lanka” இலங்கைக்கான தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப அபிவிருத்தி - திறமுறை (e-Sri Lanka Development Initiative - 2 ஆம் கட்டம்)
- இந்தக் கருத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தின் நன்மைகளை நாட்டிலுள்ள எல்லாக் கிராமங்களுக்கும் எல்லாப் பிரசைகளுக்கும் வழங்குவதன் மூலம் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகும். 2005 ஆம் ஆண்டில் 8% வீதத்திற்கு குறைவாகவிருந்த தகவல் தொழினுட்ப ஆற்றல் 2012 ஆம் ஆண்டில் 35% வீதத்தையும் விஞ்சியுள்ளதுடன் இதற்கான அடிப்படைக் காரணி தூரத்திலுள்ள கிராமிய பிரதேசங்களின் நெனசர வலையமைப்பு விரிவாக்கமாகும். இந்தக் கருத்திட்டம் 2014 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஆரம்பிக்கப்பட்டு 5-6 ஆண்டு காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பொதுத்திறைசேரியினால் விதித்துரைக்கப்பட்டுள்ள பணிப்புகளுக்கு உட்பட்டு இந்தக் கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைக்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.