• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Tropical Fruits Network (TFNet) என்னும் சருவதேச அமைப்பில் இலங்கை உறுப்பாண்மையைப் பெற்றுக் கொள்ளல்
- Tropical Fruits Network (TFNet) ஐக்கிய நாடுகளின் உணவு கமத்தொழில் அமைப்பின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட வலய அபிவிருத்தி அமைப்பாகும் என்பதுடன், இது வலய வழவகை உற்பத்தி, உற்பத்தித்திறன் பதனிடல், விற்பனை, தரம், உபயோகம் மற்றும் சருவதேச சந்தை மேம்படுத்தலுக்கான வலையமைப்பாக செயற்படுகின்றது. இந்த அமைப்பில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.