• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒன்றின் அமைவிட பரப்பு சார்ந்த தரவுகளையும் தகவல்களையும் பொதுவாக உபயோகப்படுத்துவதற்கும் பரிமாற்றிக் கொள்வதற்குமான முறையான தேசிய வேலைத் திட்டமொன்றைத் வகுத்தமைத்தல்
- ஒன்றின் அமைவிட பரப்பு எனப்படுவது வீதி, கங்கை, கட்டடம், காணி அல்லது காணியின் எல்லை போன்ற பூமியிலுள்ள அத்தகைய ஏதேனும் இயற்கையான அல்லது குறித்த இடத்திலிருந்து பூகோள அமைவை சரியாகக் காட்டக்கூடிய பூகோள அமைவிடப் பரப்பு அல்லது தரவுகளாகும். இந்த நிகழ்ச்சித் திட்டம் காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நிலஅளவையாளர் திணைக்களத்தில் தாபிப்பதற்குள்ள புறம்பான பிரிவொன்றின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கும் இதனைக் கண்காணிப்பதற்கும், இயைபுள்ள அமைச்சுக்களையும் திணைக்களங்களையும் உள்ளடக்கிய பிரதிநிதிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.