• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் சேவைகளை மாகாண மட்டத்தில் வழங்கும் பொருட்டு கிளிநொச்சியில் மாதிரி மாகாண அலுவலக மொன்றைத் தாபித்தல்
- தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் இதுசார்ந்த சேவைகளை பொது மக்களுக்கு மாகாண மட்டத்தில் வழங்குவதற்கு மாகாண அலுவலகங்களை தாபிப்பதற்கு தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் மாண்புமிகு வாசுதேவ நாணயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை மதிப்பிடுவதற்கும் 2014-2016 ஆம் ஆண்டுக்கான நடுத்தவணை கால வரவு செலவுத் திட்டக் கட்டமைப்புக்குள் நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு விரிவான கருத்திட்ட அறிக்கையொன்றை நிதி, திட்டமிடல் அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய சில பணிகள் பின்வருமாறாகும்:

* மாகாணத்தில் நடாத்தப்படுகின்ற அனைத்து மொழிப் பயிற்சி வகுப்புகளையும் மேற்பார்வை செய்தலும் இந்த வகுப்புகள் நடாத்துவதற்கான வசதிகளை வழங்குதலும்;

* சமூக ஒருங்கிணைப்பு பணிகளை கூட்டிணைப்பதற்கும் நடைமுறைப் படுத்துவதற்கும் பயனுள்ள வகையில் ஒத்துழைப்பு வழங்குதல்;

* மொழிபெயர்ப்பு மற்றும் பேச்சுப்பெயர்ப்பு வசதிகளை வழங்குதல்;

* அரசாங்கத்தின் அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது அரச நிறுவனங்கள் எதிர்நோக்குகின்ற சவால்களை இனங்காணல்;

* அரசாங்கத்தின் அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலான நடவடிக்கைகள்;

* தேசிய மொழிகள் கற்கை பயிற்சி நிறுவனம் (NILET) ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மொழிப் பயிற்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.