• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை கோவைச் சட்டத்தின் 431 ஆம் பிரிவை திருத்துதல்
- நீதிமன்ற மனையிடத்தில் குவிந்துள்ள சான்றுப் பொருட்களை அகற்றும் போது ஏற்படுகின்ற தேவையற்ற காலதாமதங்களை இல்லாதொழிக்கும் நோக்கில் உரிமை கோரப்படாத ஆதனங்கள் தொடர்பில் நீதிமன்ற அறிவித்தல் பலகைகளிலும் இரண்டு பகிரங்க இடங்களிலும் அறிவித்தல் வெளியிடப்படும் திகதி தொடக்கம் உரிமை கோருவதற்கு ஆளொருவருக்கு வழங்கப்பட்டுள்ள காலப் பகுதியை ஆறு (06) மாதத்திலிருந்து இரண்டு (02) மாதம் வரை குறைப்பதற்கும் இந்த ஆதனங்களின் பெறுமதி 2,500/= ரூபாவிலிருந்து 25,000/= ரூபா வரை அதிகரிப்பதற்கு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை கோவைச் சட்டத்தின் 431 ஆம் பிரிவை திருத்தும் பொருட்டு சட்டம் ஆக்கப்படுவதற்காக சட்டவரைநருக்கு பணிப்பு விடுப்பதற்காக நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.