• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- வலய மட்டத்தில் கைத்தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சரினால் வலய கைத்தொழில் பேட்டைகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு, எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் கைத்தொழிற் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குவதற்கு கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- மேற்போந்த வீடமைப்புத் திட்டத்தில் நீணட காலத்துக்கு முன்னர் நிருமாணிக்கப்பட்ட 147 வீடமைப்பு கூறுகளைக் கொண்ட ஆறு (06) கட்டடங்களில் சுமார் 1,000 குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர். தற்பொழுது இந்த வீடமைப்புக் கூறுகள் மிக மோசமான நிலையில் உள்ளதனால் ஆபத்தான நிலை இதன் மூலம் உருவாகியுள்ளது. இந்த கட்டடங்களின் பிரதான மட்டப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையினால் இதில் குடியிருப்பவர்கள் தற்பொழுது நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நிருமாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தைக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடமைப்புத் திட்டத்தில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்த பழமைவாய்ந்த கட்டடங்களை உடைத்து அகற்றியதன் பின்னர், இந்தக் காணியை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரித்துக் கொண்டு, இதில் பொருத்தமான வீடமைப்புக் கருத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக பிரேரிக்கப்பட்டுள்ளது. நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.