• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய கைத்தொழிற் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
- வலய மட்டத்தில் கைத்தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சரினால் வலய கைத்தொழில் பேட்டைகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு, எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் கைத்தொழிற் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குவதற்கு கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.