• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய கண் வங்கியை நம்பிக்கைப் பொறுப்பொன்றாகத் தாபித்தல்
- கண்பார்வை இழப்பு ஆசியாவில் அதிகமாகவும் உலகம் பூராவும் காணக்கூடிய பிரதான காரணம் விழிவெண்படலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற கண்நோயாகும். உலகளாவிய விழிவெண்படல கண்பார்வை இழப்பை தடுப்பதை நோக்காகக் கொண்டு சிகிச்சைகளையும் கல்வி மற்றும் ஆய்வு நிகழ்ச்சித்திட்டங்களையும் மேம்படுத்தும் நோக்கில் முக்கிய பங்களிப்பை வழங்குவதற்கு ஆசிய நாடுகளின் பிரதான விழிவெண்படல நிபுணர்களினால் ஆசிய விழிவெண்படல அமைப்பு தாபிக்கப்பட்டுள்ளது. இலாபம் ஈட்டுவதை இலக்காகக் கொள்ளாத அமைப்பான இலங்கை தேசிய கண் வங்கியினால் அன்பளிப்புச் செய்யப்படுகின்ற மனித கண் வில்லைகளை பெற்றுக் கொள்வதும் வழங்குவதும் ஆய்வுக்காகவும் கற்கை நோக்கங்களுக்காகவும் கண் வில்லைகளை வழங்குதல் தமது பணியாகக் கொண்டு இயங்குகின்றது. இலங்கை தேசிய கண் வங்கி பொதுமக்களின் நம்பிக்கைப் பொறுப்பாக பாராளுமன்ற சட்டத்தின் மூலம் மாற்றுவதற்கும் இதற்கு இயைபான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.